 |
| உங்களுக்கு தெரிந்த/ மறந்த வியப்பூட்டும் உண்மைத் தகவல்கள்... |
தமிழுக்கு'அமுதென்று' பேருண்டு
'கதி' என்ற பேருமுண்டு அறிவீரோ....
கம்பராமாயணம்+திருக்குறள் தான் அது.
திருக்குறள் பொய்யாமொழி மட்டுமன்று அதில் வியக்கும் அம்சங்கள் சில:
மொத்த குறள்கள் 1330= 1+3+3+0= 7
அதிகாரம் 133=1+3+3= 7
முப்பால் =38+70+25=7
வார்த்தைகள் மொத்தம் (இரண்டடியில்) = 7
ஏழு என்ற வார்த்தை வரும் குறள் = 7
(கு எண் - 62, 107, 126, 398, 538, 1269 & 1278)
அட.. இதன் கூட்டுத்தொகை கூட =62+107+126+398+538, 1269+1278 =7
சித்தருக்கு சித்தர் , முனிவருக்கு முனிவர்
திருவள்ளுவர் என்னும் கடவுள் அவதாரம் உலகத்தில் உள்ள மனிதர்கள் எவ்வாறு நெறிபடுத்தி/ நேர்படுத்தி வாழும் முறையை திருக்குறளில் எழுதி வைத்து சென்றுள்ளார்.
மேலும் சில தகவல்கள்
2 குறள் ஒரே மாதிரியிருக்கும் பொருள் மட்டும் சற்று மாறுபடும் (கு.எண் 355 & 423 , 241&411)
2 அதிகாரங்கள் ஒரே பெயருள்ள தலைப்பு வருகிறது (அதி: -71&128)
2 குறள்களில் பறை என்னும் வார்த்தை வருகிறது (கு 1115 & 1180)
3 பெயர்கள்
பேரறிவாளன் (215)
அன்பறிவு (513)
வள்ளி (1304) மட்டும் உபயோகபடுத்தப்பட்டுள்ளது ஆனால் பொருள் மட்டும் சற்று மாறும்...
தமிழ்... முருகன்... என்னும் பெயர்கள் எக்குறளிலும் குறிப்பிடப்படவில்லை
கு.560- 6 வகையான தொழில்கள் பற்றி குறிப்புள்ளது.
கு. 210 - இந்தக் குறளின் பொருளில் மட்டும் சற்று முரண்பாடுள்ளது
ஏற்புடையதாக படவில்லை என் அறிவுக்கு (நீங்களும் சிந்திக்கவும்)
4 விலங்குகள் நடப்பன - நரி, மாடு, யானை, புலி
4 ஊர்வன - ஆமை, முதலை, பாம்பு, மீன்
4 பறப்பன- மயில்,கொக்கு, காக்கை, ஆந்தை
4 தாவரங்கள் - தாமரை, அணிச்சம், வள்ளி, நெருஞ்சி பற்றிய குறிப்புள்ளது
* * **"
7 என்ற எண்ணுக்கு மட்டும் அவ்வளவு ஏன் சிறப்பு...
7 பிறவிகள்
1)தேவர், 2)மனிதர், 3)விலங்கு, 4)பறவை, 5)ஊர்வன, 6)நீர்வாழ்வன, 7)தாவரம்
7 நரகங்கள்
1) கூடசாலம், 2) கும்பிபாகம், 3) அள்ளல், 4) அதோகதி, 5) ஆர்வம், 6) பூதி, 7) செந்து. (பிங்.)
7 சுவரங்கள் (ஸ்வரங்கள்)
1. ஷட்ஜம்(ஸ ச)
2.ரிஷபம்(ரி)
3. காந்தாரம்(க)
4. மத்திமம்(ம)
5. பஞ்சமம்(ப)
6. தைவதம்(த)
7. நிஷாதம்(நி)
7 ரிஷிகள்
அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியப
7 மேலுலகம்
7. சத்யலோகம்
6. தபோலோகம்
5. ஜனோலோகம்
4. மஹர்லோகம்
3. சுவர்லோகம்
2. புவர்லோகம்
1. பூலோகம் - நாம் வாழும் மண்ணுலகம்
7 கீழுலகம்
அதலலோகம்
விதலலோகம்
சுதலலோகம்
தலாதலலோகம்
மகாதலலோகம்
ரஸாதலலோகம்
பாதாளலோகம்
7 வள்ளல்கள்..(கடையேழு வள்ளல்கள்)
மேலும் சில...7...7...
இதெல்லாம் அக்காலத்தில்
இக்காலத்தில்...
7 உலக அதிசயங்கள்
7 மாநில சகோதரிகள்
என சிறப்புகள் ஏராளம் உள்ளதால்..
விரும்பினாரா அல்லது
அவர் பெயரிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையும்
தி+ரு+வ+ள்+ளு+வ+ர்=7
என்பதாலா...
(குறிப்பு: தமிழ் அறிஞர்கள்/தமிழ்கூறும் நல்லுலகம் பிழையிருப்பின் மன்னிக்கவும் ...)
**. **
தங்கம். வீகோசீ (Thangam VEEGOSEE)