28-05-2023(மே 28)
உலக
பட்டினி நாளென
பலரறியாத இன்று .
ஆதீனங்கள் அணிவகுக்க
திருமுறைகள் ஓத
பதிய பாராளுமன்றம்
திறந்து உலகறியச் செய்தது
நம் பாரதநாடு...
கர்வச் சிரிப்புடன்
கேலிச் சிரிப்புடன்
சிவந்த சினத்துடன்
நகரும் நகர்ப்புறவாசிகள்..
செங்கோலா..
புதிய நாடாளுமன்றமா..
என்ன.. ஏன்.. எதற்கென
கேள்வியுடன் நகரும்
கிராமவாசிகள்...
எதையும் அறியாமல்
எங்கோ.. ஏதோ.. மூலையில்
வியக்கும் சாதனைகள்
வியர்க்கும் வேதனைகள்
பண்பாடற்ற பாவங்களும்
இதனால் ஒன்றும்
தடைபடுவதில்லை என்றும்...
செம்மை ஆட்சி
செய்வே னென்னும்
பிரதமர் சூளுரையுடன்...
விழாக்கோலம் பளபளக்கும்
பாரத நாட்டில்
பசியும்..
பரதேசி வாழ்க்கையும்..
குறையுமா.. என்னும்
ஆதங்கத்துடன்
எளிய மனிதன் வாழ்வும்
ஏற்றம் அடையுமா..
என்னும் ஏக்கத்துடன்
இன்றைய நாள்
இனிதே முடிந்தது
வரலாற்று நாளாக...
* * *
No comments:
Post a Comment