என்பது
நல் எண்ணம்
வெள்ளை நிறம்
என்றால்
நல் அமைதி
எனில் இதற்கேன்
விதவையென்னும்
மற்றுமோர் பெயர்...
விதவை என்னும்
வெள்ளை
தேவதைகளாய்
பொம்மைகளாய்
உணர்வின் றிருக்கிறோம்
உண்மையாக
அமைதியாக
ஆண் துணையில்லா
ஊமைகளாக..
கட்டியவன்
கைவிட்டு சென்றது
படைத்தவன் சாபமா
பித்ருக்களின் பாவமா
கேள்விகள் துளைக்க..
வாய்த்தவன்
இல்லையெனில்
வயிற்றுப்பசிக்கு
வழியுண்டோ
தடுமாறிய
இருண்ட உலகில்
திட மனதுடன்
வெளிச்ச திசை
நோக்குவதற்குள்
திக்கறியா ஆடுகளாய்
அகப்படுகிறோம்
வர்க்கமனம் படைத்த
ஆண்களின்
அகதிகளாக..
ஆனாலும்..
துணிவோடும்
ஆண்டவன்
துணையோடும்
எமக்கும் வாழ்வுண்டென
ஏங்கும்
கைம்பெண்களின்
கரம் பிடித்து
தூக்கி விடும்
கணவன்களின்
நல்மனம் நோக்கி..
சிறைகளை உடைத்த
சிறகுகள் முளைத்த
பறவைகளாய்
சுதந்திர வானம்நோக்கி..
நடைபோடுகிறோம்
உணர்வில்லா
சடங்குகளுக்குள்
வளைந்த
நடை சடலங்களாக
(ஜடங்களாக)...
* *

No comments:
Post a Comment