அகந்தை அழித்து
ஆக்கலில் வெற்றி பெறும்
விந்தைப் பிறவிகள்
தந்தைகள்..
பூக்களாய் சிதறிய
பிள்ளைகளால்
பூமிப் பந்தை
சிரிக்க வைக்கும்
சிந்தனை சிற்பிகள்
தந்தைகள்..
நன்மை தீமை
நாலும் தெரிந்தவை
கற்பித்தலும்..
தோல்வியிலும்
தோள் கொடுத்தும்
என்றும் எதிலும்
ஆசானாய்
எல்லாம் வல்ல
இறைவனாய் காப்பது
கண்ணெதிரில்
காணும் அப்பாக்களே..
முடியாதவற்றை
முடியுமென
முடிக்கும்வரை
முயற்சியை
மூச்சாக்குபவன்
தந்தைகள்..
கள்வனோ
கதாநாயகனோ
வெறுத்தாலும்
மறுத்தாலும்
ஒதுக்காமல்
அரவணைப்போம்
முதிய தந்தையரை
படிப்பினை தருவோம்
இளம் தந்தையராய்
இனி வளரும் தந்தையர்கு
இன்றைய தினம்...
*. * *
Wav nice varigal
ReplyDelete