🌸தமிழே... உன்னை வணங்குகிறேன்🌸
தரணியெங்கும்
சுற்றினாலும்
கண்குளிரும் கலைகள்
பசியாற்றும் பண்டங்கள்
கூட்டமுள்ள குடும்பம்
ஆட்டமுள்ள ஆர்ப்பாட்டம்
பாசமுள்ள பரிமாற்றம்
பலநூறு அனுபவங்கள்
பெற்றாலும் கற்றாலும்..
தாய் மண்ணில்
தடம்பதிக்கும் சுகமே
இன்பம். ஆனந்தம்...
பண்பிலும்.. பண்பாட்டிலும்..
வாழும் முறையிலும்
மேலோங்கி நிற்பது
தமிழர்தம் கலாச்சாரமே
என்னும்
கர்வம் கொள்வதால்
தமிழே... உன்னை
தலை வணங்குகிறேன்...
மீண்டும் ஓர்
பிறவியெனில்
தமிழினத்தில் என்னை
தவழவிடு
தமிழ்த் தாயே...
* *
No comments:
Post a Comment