*எதை உண்பதற்கும் முன் கவனமாக இருங்கள்...*
முரண்பாடுள்ள மனிதர்கள், செயல்கள் கேள்விபட்டிருக்கிறோம்... ஆனால் முரண்பாடுள்ள உணவும் அதன் உடனடி விளைவும் பார்த்திருக்கிறீர்களா.
"நீண்ட நாட்களுக்கு பிறகு என் பையன் மனைவி விரும்பி சொன்னதற்காக நேற்று மதியம் தில்லி கன்னாட் பிளேசில் உள்ள சரவணபவனுக்கு மதிய உணவு உண்ண சென்றோம்.. வழக்கம்போலவே கூட்டம் அதிகம்... டோக்கன கொடுத்து அழைப்பார்கள்..
இடம் கிடைத்து உட்கார்ந்ததும் ஆர்டர் எடுக்க பேரர் கேட்கும்பொழுது.. மாற்றத்திற்காக நமது வீட்டில் அடிக்கடி செய்யாததை முயற்சி செய்வோமென சப்பாத்தி, ஆப்பம் எனக்கும், மனைவி மகன் இரண்டு ஃபுல் மீல்ஸ் அதாவது அனைத்து காய்கறி கூட்டு பொறியலுடன் சோறு குழம்பு ரசம் தயிரென இருக்கும் இரண்டு பிளேட் செய்தோம்...
நன்றாக இருந்தது என்று சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தோம்..
வரும் வழியில் அரைமணி நேரம் ஆகவில்லை.. மனைவி சொன்னாள் வயிறு லேசாக வலிக்கிறதென்று... நான் சொன்னேன் நம் வீட்டில் செய்யும் உணவு வகைதானே ரெஸ்டாரன்ட் லும் சாப்பிட்டோம்.. ஏன் வலிக்குதுன்னு...
அதற்கு "எனக்கும் அதுதான் புரியலைங்க"ன்னாள் ..
சரியாப் போயிடும் னு சொல்லி இருந்துவிட்டோம்... ஆனால் இரவு உணவை வீட்டில் உண்ண பசியெடுக்க வில்லை.. மதிய உணவின் கனம்தானென வேண்டாமென உறங்கிவிட்டோம்...
அடுத்த நாள்.. என்றும் காலைக்கடன் பிரச்சினை இல்லாத எனக்கு
Gut health கெட்டதால் காலைக்கடன் முடிக்க சிரமமாக இருந்தது..(மலம் வரவேயில்லை)
என்ன.. வீட்டிலும் ரெஸ்டாரன்ட்டிலும் ஒரே மாதிரியான உணவுதானே.. கொஞ்சம் வேணா மசாலா தூக்கலாக இருக்கலாம் என்றுதான் நமக்கு நினைக்கத் தோணும்.. ஆனாலும் வயதின் காரணமாக உடல்நலம் உடனே கெடத் தொடங்குகிறது.. மனைவியும் சொன்னாள் வயிறு கடித்து கடித்து தான் காலைக்கடன் முடித்தேன். பையன் 15 வயதென்பதால் பிரச்சினை ஒண்ணுமில்லை...
நான் நினைத்தேன... நம் பணத்தை செலவுசெய்து நாமே வினை வாங்கிவிட்டோம் என்று..
எல்லோருக்கும் தெரியும் காலைக்கடன் சரிவர வராமல் நீண்ட நேரம் முக்குபவர்களுக்கு தான் பைல்ஸ் பிராப்ளம் அதிகம் வருகிறது...
ஒரே வகையான உணவுதான் ஆனால் செய்யும் முறை அதை பதப்படுத்தப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட செயற்கை மசாலா கலப்பதால் (கண்டிப்பாக கலப்பதுதான் ஓட்டல் வியாபாரத்தின் எழுதப்படாத சட்டம்) எவ்வளவு விளைவுகள் ஆரோக்கியம் கெடுகிறதென புரிந்துகொள்ளவும்..
ஆகவே.. எனக்கும் புரிந்தது, ஆனால் gut health எப்படி சரியாக்குவது என்று... எனக்கு தெரியுமென்பதால் கவலைப்படவில்லை..
நம் தமிழ்ச் சமூக சித்தர்கள் கற்றுக்கொடுத்த பாரம்பர்ய சொத்து..
*யோகாசனம்* தான் அதற்கு சிறந்த மருந்து ..
அரைமணி நேரம்.. யோகா தான் செய்தேன் .
அதாவது
பிராணயாமம் முடிந்து மற்ற 10 யோகா 10நிமிடம், அடுத்ததாக முக்கியமான *தனுராசனம்*, *ஹலாசனம்* இரண்டும் 15நிமிடம் செய்து முடித்தேன்..
வயிறு இளகியாதாக உணர்ந்தேன்..
ஓய்வேடுத்த 15 நிமிடங்களில் காலைக்கடன் எந்த வலியும் பிரச்சினையின்றி முடிந்தது... 😃
So... we must understand the magic of Yoga.
மனதும் உடலும் இரண்டும் நன்றானதும்... சிரித்துக் கொண்டே
சொல்லிக்கொண்டேன்.. *What a Great ancient Doctors our Tamil Sidhars were*
எதை உண்பதற்கும் முன் கவனமாக இருங்கள்..
*விரும்பும் உணவே..*
*வியாதிக்கு விருந்து வைக்கிறது*
*அதை சரிசெய்ய*
*உடலே மருந்துமாகிறது...*
*உடலை நேசிப்பவன்*
*தினம் யோகாவை யாசிப்பான்..*
***
(I know the whole matter can be narrated in little more simple.. ஆனால் என் தாய்மொழியில் மட்டுமே விளக்கமாக சொல்லமுடியும...
No comments:
Post a Comment