Saturday, 24 June 2023

🌸அன்னையர் தின வாழ்த்துக்கள்🌸



அம்மா.. அன்னை..

ஆத்தா.. தாய்..

அம்மி.. அம்மே..

மம்மி... மாம்..மதரென

பல பெயர்களில்

பல மொழிகளில்

அழைத்தாலும்

அவள் மட்டுமே

அன்பெனும் 

பேரூற்றின் 

ஆணிவேர்..


பல கிளைகளாய் 

படர்ந்த 

ஆல மரமாயினும் 

ஆணி வேரறுந்தால்

அடிமட்டம் தான்..


பண்பு, பாரம்பரியம்

அமைதி அரவணைப்பு 

காலம்  காலமாய்

இம் மண்ணில்

தாங்கி நிற்கும்

அம்மா என்னும்

ஆணிவேர் காயுமுன்

காவலனாய்

கண்ணாய்

காத்து நிற்போம்..


வாழ்வெல்லாம்

வாடா மலராய்

வசந்த மளிக்கும்

வருங்கால அன்னையராய் 

மாறும் பெண்னினத்தை 

வாடியமலராய் வீழாது

தாங்கும் தூணாய்

துணிந்து நிற்போம்...

* * *

1 comment: